உலகம்

ஏ.கே.47 துப்பாக்கியைப் போன்றே 'ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி நம்பகமானது - ரஷ்ய அதிபர் புடின்

ஏ.கே.47 துப்பாக்கியைப் போன்றே 'ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி நம்பகமானது - ரஷ்ய அதிபர் புடின்

JustinDurai

கொரோனாவுக்கு எதிராகப் போராடக்கூடிய 'ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி, ஏகே-47 துப்பாக்கிகளைப் போலவே நம்பகமானவை என்று தெரிவித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்.

ரஷ்ய நாட்டின் தயாரிப்பான கொரோனா தொற்றுக்கு எதிராக 79.4 சதவீத செயல்திறனைக் கொண்ட 'ஸ்புட்னிக் லைட்' (Sputnik Light vaccine) ஒற்றை தடுப்பூசிக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம் கொடுத்துள்ளது. தற்போது கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் அனைத்தும் இரண்டு டோஸ்கள் உடையவை. ஒரு டோஸ் மட்டுமே செலுத்தப்படும் தடுப்பூசி என்ற பெருமை ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு கிடைத்துள்ளது. 

'ஸ்புட்னிக் லைட்' தடுப்பு மருந்து குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறுகையில், கொரோனாவுக்கு எதிராகப் போராடக்கூடிய 'ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி, ஏகே-47 துப்பாக்கிகளைப் போலவே நம்பகமானவை. அனைத்து வகையான கொரோனா உருமாற்ற வகைகளுக்கும் எதிராக இந்த தடுப்பூசி சிறப்பாக வேலை செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்'' என்றார்.  ஏ.கே.47 துப்பாக்கிகள் ரஷ்ய நாட்டின் காப்புரிமை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.