உலகம்

ஷீல்ட் கிளாஸ் இல்லாமல் போர் விமானத்தை இயக்கிய ரஷ்ய விமானி - வைரலான வீடியோ

ஷீல்ட் கிளாஸ் இல்லாமல் போர் விமானத்தை இயக்கிய ரஷ்ய விமானி - வைரலான வீடியோ

EllusamyKarthik

ரஷ்ய விமான படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் போர் விமானமான SU - 57 விமானத்தை PROTECTIVE GLASS SHIELD இல்லாமல் விமானி ஒருவர் இயக்கியுள்ளார்.

அந்த வீடியோ தற்போது பலரது கவனத்தை பெற்று வருகிறது. 

அதிகபட்சமாக மணிக்கு 2440 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் இந்த விமானத்தை கொண்டு அண்மையில் ஒத்திகை ஒன்றை நடத்தியுள்ளது ரஷ்ய விமானப்படை.

அதில் போரின் போது செயல்படுத்த வியூகங்களை பரிசோதனை முயற்சியாக விமானிகள் செய்து பார்த்துள்ளனர். 

அசாதாரண சூழல்களை விமானிகள் கையாளுவதற்காக  PROTECTIVE GLASS SHIELD இல்லாமல் அந்த விமானி போர் விமானத்தை இயக்கியுள்ளார் என்றும், இருப்பினும் பனி மற்றும் காற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் விமானி பிரத்யேக பாதுகாப்பு கவச உடையை அணிந்திருந்ததாகவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது PROTECTIVE GLASS SHIELD சேதமடைய வாய்ப்புகள் இருப்பதால் அப்படி நடந்தால் விமானி எப்படி செயல்படுவார் என்பதற்கான வெள்ளோட்டம் தான் இது எனவும் வல்லுநர்கள் சொல்லியுள்ளனர்.