சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளை நோக்கி ரஷ்யா நடத்திய விமானத் தாக்குதலில் பொதுமக்கள் 34 பேர் உயிரிழந்துள்ளதாக பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
டெய்ர் எஸார் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் 40 பயங்கரவாதிகளை குறிவைத்து ரஷ்ய விமானப்படை தாக்குதல் நடத்தியது. அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் 34 பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. டெய்ர் எஸார் பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக ரஷ்ய ஆதரவு அரசுப் படையும், அமெரிக்க ஆதரவு எஸ்.டி.எஃப் படையும் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றன. 2011-ல் இருந்து சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினால் 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.