உலகம்

‘ஸ்புட்னிக் - வி’ தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 92% பலன் தரக்கூடியது - ரஷ்யா

‘ஸ்புட்னிக் - வி’ தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 92% பலன் தரக்கூடியது - ரஷ்யா

Sinekadhara

மூன்றாம் கட்ட சோதனையில் உள்ள ஸ்புடினிக் - வி என்ற தடுப்பூசி 92% பலன் தரக்கூடியது என்றும், விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. 

இதுவரை உலக நாடுகள் அனைத்திலும் 1.2 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களை பறித்த கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் சோதனை முயற்சியில் இறங்கியுள்ளன. பல மாதங்களாக பல்வேறு கட்டங்களாக சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்புட்னிக் - வி தடுப்பூசி, 92% கொரோனாவை எதிர்த்துப் போராடுகிறது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உலக நாடுகளிலேயே முதன்முறையாக கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ரஷ்யா ஆகஸ்ட் மாதமே பதிவு செய்தது. பெரிய அளவிலான சோதனையை செப்டம்பரில் தொடங்குவதற்கு முன்பே அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. முதலில் 16 பேரை வைத்து நடத்தப்பட்ட இடைக்கால சோதனை முடிவுகளில் கொரோனாவின் வீரியத்தை ஸ்புட்னிம் - வி தடுப்பூசி அழித்து அதிக பயனைத் தரக்கூடியதாக உள்ளது என ஆர்.டி.ஐ.எஃபின் தலைவர் கிரில் டிம்ட்ரிவ் கூறியிருந்தார்.

அடுத்தடுத்த சோதனைகளுக்குப் பிறகு மூன்றாம் கட்ட சோதனை கமாலியா நிறுவனத்துக்குட்பட்ட 20 சிகிச்சை மையங்களில் 40 ஆயிரம் தன்னார்வலர்களை வைத்து நடத்தப்பட்டது. அதில் முன்பு கண்டறியப்பட்ட ப்ளேஸ்போ என்ற தடுப்பூசி போடப்பட்டவர்களை விட ஸ்புட்னிக் - வி தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு கொரோனா பரவல் 92% குறைவாகவே இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக சளியை உருவாக்கும் வெவ்வேறு வைரஸுகளுக்கு 21 நாட்கள் இடைவெளியில் இரண்டுமுறை தடுப்பூசி போடப்படும்படி இந்த ஸ்புட்னிக் - வி உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் - வி தவிர மற்ற தடுப்பூசிகளையும் ரஷ்யா சோதனை செய்துவருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.