ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் ராணுவம் இணைந்து மேற்கொண்டு வரும் போர் ஒத்திகையை ரஷ்ய அதிபர் புதின் நேரில் பார்வையிட்டார்.
ZAPAD-2021 என்ற பெயரில் ரஷ்யாவில் இந்த ஒத்திகை நடைபெற்று வருகிறது. இரு நாட்டு வீரர்களும் எதிரிகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து நவீன ஆயுதங்களை கொண்டு பயிற்சி மேற்கொண்டுள்ளனர். போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், டேங்கர்கள் உள்ளிட்டவைகளை போர் பயிற்சியில் ஈடுபடுத்தினர். இரு நாட்டு ராணுவ வீரர்களின் போர் பயிற்சியை ரஷ்ய அதிபர் புதின் நேரில் பார்வையிட்டார். நேட்டோ படைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை அச்சமூட்டும் வகையில் ரஷ்யா இத்தகைய போர் ஒத்திகைகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.