உலகம்

பிரிட்டனில் ஆளுங்கட்சி எம்பி கத்தியால் குத்திக் கொலை

பிரிட்டனில் ஆளுங்கட்சி எம்பி கத்தியால் குத்திக் கொலை

Sinekadhara

பிரிட்டன் எம்பி டேவிட் அமெஸ் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் இது பயங்கரவாத தாக்குதல் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த டேவிட் அமெஸ், லண்டனுக்கு கிழக்கே உள்ள லீக் ஆன் சி நகரில் தேவாலயம் ஒன்றில் தொகுதி மக்களுடன் உரையாற்றி கொண்டிருந்தார். அப்போது 25 வயது இளைஞர் அவரை கத்தியால் குத்தி படுகொலை செய்தார். இந்த சம்பவம் பிரிட்டன் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கொலைசெய்த இளைஞர் சோமாலியாவை பூர்விகமாக கொண்டவர் எனத் தெரிய வந்துள்ளது.

இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என அறிவித்துள்ள காவல்துறையினர் அந்த இளைஞரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2016ஆம் ஆண்டு தொழிலாளர் கட்சியை சேர்ந்த பெண் எம்பி ஜோ காக்ஸ் வலதுசாரி தீவிரவாதியால் படுகொலை செய்யப்பட்டார்.