உலகம்

வீடுகள் கொளுத்தப்பட்டதா? மியான்மர் எல்லையில் புகை மண்டலம்

வீடுகள் கொளுத்தப்பட்டதா? மியான்மர் எல்லையில் புகை மண்டலம்

webteam

வங்கதேசத்துக்கு ரோஹிங்யா முஸ்லிம்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து வரும் நிலையில், மியான்மர் எல்லைப் பகுதி திடீரென புகை மண்டலமா‌க ‌காட்சியளிக்கிறது.

மியான்மர் அரசின் அடக்குமுறை காரணமாக அந்நாட்டின் ரா‌கினே மாகாணத்தில் வசித்து வந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்யா இன முஸ்லிம்கள் வங்கதேசத்தி‌ல் அடைக்கலம் புகுந்துள்ளனர். தங்களது வீடுகளை அடித்து நொறுக்கி, முழு கிராமத்தையும் மியான்மர் ராணுவத்தினர் தீயிட்டு கொளுத்துவதாக வங்கதேசம் வந்து சேர்ந்த அகதிகள் அச்சத்துடன் தெ‌ரிவித்து வருகின்றனர். 
இந்தச் சூழலில் வங்கதேசம் அருகே மியான்மருக்கு உட்பட்ட எல்லைப் பகுதி திடீரென புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. அங்குள்ள ரோஹிங்யா முஸ்லிம்களின் வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டதே, அந்த புகை மண்டலத்துக்கு காரணமாக இருக்கலாம் என சில அமைப்புகள் சந்தேகம் தெரிவித்துள்ளன. எனினும் உண்மை நிலவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதன் கார‌ணமாக மியான்மர், வங்கதேச எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.