உலகம்

ரோஹிங்யா மக்களுக்காக 700 டன் நிவாரணப் பொருட்கள்

webteam

வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ள ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்காக 700 டன் எடை கொண்ட நிவாரணப் பொருட்களை ஐஎன்எஸ் காரியல் போர்க் கப்பல் மூலம் இந்தியா அனுப்பி வைத்தது.

மியான்மர் அரசின் அடக்குமுறை காரணமாக அங்கு வாழ்ந்து வரும் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர். இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை செய்து தருவதற்கு சர்வதேச நாடுகள் தற்போது உதவிக் கரம் நீட்டி வருகின்றன.

இந்நிலையில் இந்தியா சார்பில் ஐஎன்எஸ் காரியல் போர்க் கப்பல் மூலம் உணவு, உடைகள், கொசு வலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 700 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. காக்கிநாடாவில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல் வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்துக்கு சென்று அந்த நிவாரணப் பொருட்களை வழங்கவுள்ளது.