உலகம்

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறியது ஜப்பான் ராக்கெட்!

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறியது ஜப்பான் ராக்கெட்!

webteam

ஜப்பானில் விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட், புறப்பட்ட சில விநாடிகளுக்குள் கீழே விழுந்து வெடித்துச் சிதறிய காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

ஜப்பானைச் சேர்ந்த இன்டர்ஸ்டெல்லார் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் குறைந்த விலையில் சிறிய ரக ராக்கெட்டுகளை தயாரித்து வருகி றது. அந்த வகையில் மோமோ-2 என்ற ராக்கெட்டை அந்நிறுவனம் தயாரித்திருந்திருந்து. 32.8 அடி உயரத்துடன் ஆயிரத்து 150 கிலோ எடையில் தயாரிக்கப்பட்ட இந்த ராக்கெட்டை விண்ணில் 100 கிலோ மீட்டர் தூரம் வரை பறக்க விடுவதற்கான சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள ஹோக்கைடோ (HOKKAIDO) விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் செலுத்தப்பட்டது. பூமியில் இருந்து சில அடி தூரமே பறந்த அந்த ராக்கெட், வெடித்துச் சிதறியது. இதனால் அப்பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு பற்றி தகவல் இல்லை.

இன்டர்ஸ்டெல்லார் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் டகாரியோ இனகவா, ராக்கெட் வெடித்து சிதறியதற்கு மன்னிப்பைக் கோரியுள்ளார். என்ஜீனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் வெடித்து சிதறிய ராக்கெட்டின் பாகங்களை சேகரித்து விபத்துக்கான உண்மையான காரணத்தை அறிவோம் என்றும் தெரிவித்துள்ளார்.