ரோபோ நாய், ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

பரப்புரையில் துப்பாக்கிச் சூடு| உச்ச பாதுகாப்பில் ட்ரம்ப் வீடு.. தோட்டத்தைச் சுற்றிவரும் ரோபோ நாய்!

தனது தனிப்பட்ட பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள ட்ரம்ப், அதற்காக புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள அவரது மார்-ஏ-லாகோ தோட்டத்தில் ஒரு ரோபோ நாய் ஒன்றை காவலுக்கு உருவாக்கிப்பட்டுள்ளது.

Prakash J

அமெரிக்காவில் 47வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 20 ஆம் தேதி அவர் பதவியேற்க உள்ளார். வெள்ளை மாளிகையில் அதற்கான பண்கள் வேகம்பிடித்து வருகின்றன. உலகம் முழுவதும் அவரைச் சுற்றிப் பல்வேறு சவால்கள் காத்திருக்கும் வேளையில், தம்முடைய ஆட்சியில் யார் யாருக்குப் பங்கு கொடுப்பார் என்கிற தகவல்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. மறுபுறம், அவருடைய பாதுகாப்பு குறித்த விஷயங்களும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.

டொனால்டு ட்ரம்ப்

அந்த வகையில், தனது தனிப்பட்ட பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள ட்ரம்ப், அதற்காக புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள அவரது மார்-ஏ-லாகோ தோட்டத்தில் ஒரு ரோபோ நாய் ஒன்றை காவலுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. 'Do not pet' என்ற எச்சரிக்கைப் பலகையுடன் வலம் வரும் அந்த ரோபோ நாய், எஸ்டேட்டின் புல்வெளிகள் முழுவதும் சாதாரணமாக உலா வருகிறது. அதாவது, அந்தப் பலகை ’செல்லப்பிராணியை வளர்க்காதே’ என்று கூறுகிறது. ஆனால், ‘இது நட்பு செல்லப் பிராணி அல்ல, வேலை செய்யும் இயந்திரம்’ என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

தேர்தல் பிரசாரத்தின்போது ட்ரம்ப், இரண்டு துப்பாக்கி தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டார். அதன் விளைவாகவே, ட்ரம்ப்விற்கு இந்தப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற ரோபோட்டிக் நாய்கள் சில ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், உக்ரைனின் ராணுவம் ரஷ்யப் படைகளுக்கு எதிராக 30 ரோபோ நாய்களை அனுப்பியுள்ளது. அவை வீரர்களுக்கு விரைவாகப் பொருட்களை வழங்கவும், முன்வரிசையில் உள்ள வீரர்களுக்கு ஆபத்தைக் குறைக்கும் வகையில் செயல்படவும் முடியும்.

இதையும் படிக்க: அமெரிக்கா|தேர்தல் தோல்வியால் 170கோடி கடன்; ஜனநாயக கட்சியினருக்கு உதவி செய்யுங்கள் என ட்ரம்ப் கிண்டல்

ரோபோட்டிக் நாய்கள், சட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் அவசரகால வரிசையில் முதலில் பதிலளிப்பவர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக, நாடு முழுவதும் உள்ள பொதுப் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு மிகவும் பிடித்தமானதாக மாறியுள்ளது.

மேலும், ரோபோட்டிக் நாய்கள் பாதுகாப்பு பணிகளுக்காக அமெரிக்காவில் மிகவும் பிரபலமாகி வருகிறது. ஆபத்தான சூழ்நிலைகளைக் கையாள காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் இதேபோன்ற ரோபோ நாய்களைப் பயன்படுத்துகின்றனர். நியூயார்க்கில், காவல்துறையினருக்குச் சொந்தமாக ’டிஜிடாக்’ என்ற ரோபோ நாய்கள் உள்ளன. அவை அதிகாரிகளுக்குப் பதிலாக ஆபத்தான பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த ஆண்டு, நியூயார்க்கில் பார்க்கிங் கேரேஜ் இடிந்து விழுந்தபோது, ​​இடிபாடுகளில் இருந்து தப்பியவர்களைத் தேட தீயணைப்புத் துறை ரோபோ நாயை அனுப்பியது. மக்கள் நடப்பதற்கு மிகவும் ஆபத்தான இடத்தில் ரோபோ செல்ல முடியும் என்பது இதன் வடிவமைப்பின் சிறப்பாகும்.

இதையும் படிக்க: வங்கதேசம்| ட்ரம்ப் வெற்றியை கொண்டாடியவர்கள் மீது அடக்குமுறையை ஏவிய யூனுஸ் அரசாங்கம்! பின்னணி என்ன?