உலகம்

ஜி20 மாநாடுக்கு எதிர்ப்பு: ஹேம்பர்க் கலவரத்தில் 200 போலீசார் காயம்!

ஜி20 மாநாடுக்கு எதிர்ப்பு: ஹேம்பர்க் கலவரத்தில் 200 போலீசார் காயம்!

webteam

ஜி- 20 எனப்படும் வளர்ந்த 20 நாடுகளின் கூட்டம் நடைபெற்ற ஜெர்மனியின் ஹேம்பர்க் நகரில் வன்முறை வெடித்தது. 
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், இந்திய பிரதமர் மோடி உள்பட பலநாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். உலக தலைவர்களின் வருகையை ஒட்டி இந்த நகரம் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இந்த மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலாளித்துவ கொள்கை எதிர்ப்பாளர்கள் கருப்பு உடையணிந்து ஹேம்பர்க் நகரில் ஒன்று கூடி, தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். போலீசார் அவர்களை கலைந்து செல்லும் படி எச்சரித்தனர். இதையடுத்து மோதல் வெடித்தது. பின்னர், இரண்டாவது நாளும் போராட்டம் நீடித்தது. தண்ணீரைப் பாய்ச்சி அடித்து போலீசார் போராட்டக்காரர்களை கலைத்தனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் 200க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்