உலகம்

“பகத்சிங் ஜிந்தாபாத்” - அவரது நினைவு நாளன்று பாகிஸ்தான் நாட்டில் ஒலித்த முழக்கம்!

“பகத்சிங் ஜிந்தாபாத்” - அவரது நினைவு நாளன்று பாகிஸ்தான் நாட்டில் ஒலித்த முழக்கம்!

EllusamyKarthik

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இந்தியா இருந்த போது இந்தியர்களுக்கு எதிராக அவர்களது காட்டு மிராண்டித்தனமான செயல்களை எதிர்த்து தனது குரலை எழுப்பியவர் புரட்சியாளர் பகத்சிங். அதனால் 23 வயதில் அவர் தூக்கிலிடப்பட்டார். அவர் பிறந்தது மற்றும் தூக்கிலிடப்பட்டது என இரண்டுமே பிரிட்டிஷ் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த பஞ்சாப் மாகாணத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த பகுதி பாகிஸ்தான் வசம் உள்ளது. 

அவர் மார்ச் 23, 1931-இல் தூக்கிலிடப்பட்டார். அவர் கனவு கண்ட சுதந்திர இந்தியாவில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளும் ஒருங்கிணைந்த இந்தியாவில் இருந்தன. நாட்டின் விடுதலைக்காக உயிர்நீத்த அவரது தியாகத்தை ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளன்று போற்றுவது வழக்கம். இந்தியாவில் அந்நாளில் அவரது முழக்கங்கள் முழங்குவதும் உண்டு.

 

இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டில் அவர் தூக்கிலிடப்பட்ட சிறைச்சாலைக்கு வெளியே அவரது தியாகத்தை போற்றும் வகையில் “பகத்சிங் ஜிந்தாபாத்” என கைகளில் மெழுகுவர்த்திகளை தாங்கியபடி முழங்கியுள்ளனர். இதனை முற்போக்கு மாணவர்கள் கூட்டமைப்பு பாகிஸ்தானில் முன்னெடுத்துள்ளது. 

தகவல்: DNA