உலகம்

அழிந்து வரும் திமிங்கலத்தின் அரிய இனம்: தந்தம், இறைச்சிக்காக வேட்டையாடப்படும் நார்வால்

அழிந்து வரும் திமிங்கலத்தின் அரிய இனம்: தந்தம், இறைச்சிக்காக வேட்டையாடப்படும் நார்வால்

Sinekadhara

அழிந்து வரும் அரிய இனமான நார்வால் எனப்படும் தந்தம் போன்ற கூர்மையான மூக்கு கொண்ட திமிங்கலங்களை ரஷ்ய ஆராயச்சியாளர்கள் ஆர்க்டிக் கடல் பகுதியில் கண்டறிந்துள்ளனர்.

முதல்கட்ட ஆய்வில் இவை இனப்பெருக்கத்திற்காக தற்காலிகமாக ரஷ்யாவின் ஆர்க்டிக் கடல் பகுதிக்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது. நார்வால் திமிங்கலங்கள் இறைச்சி மற்றும் தந்தத்திற்காக வேட்டையாடப்படுவதால், அவற்றை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.