உலகம்

உடல் எடையைக் குறைக்க, வாய்க்கு பூட்டுபோடும் புதிய கருவி: நியூசி. ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

உடல் எடையைக் குறைக்க, வாய்க்கு பூட்டுபோடும் புதிய கருவி: நியூசி. ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

நிவேதா ஜெகராஜா

வாயைக் கட்டினாலே உடல் எடையைக் குறைக்கலாம் என்பதை பலரும் சொல்லக் கேட்டிருப்போம். இந்த சொல்லை நிஜமாக்கும் வகையில், வாய்க்கு பூட்டுப்போடும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் OTAGA பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழு, உடல் எடை குறைப்புக்கான புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கருவியை வாயில் பொருத்தினால், 6 மில்லி மீட்டர் அளவுக்கு மட்டுமே வாயை திறக்க முடியும். ஆனால் வழக்கமாக பேச முடியும். இந்தக் கருவி பொருத்தப்படுவதால், திட உணவுப் பொருட்களை உட்கொள்ள முடியாமல், திரவ உணவுகளை மட்டுமே உட்கொள்ள முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் உடல் எடை குறையும் எனக்கூறுகின்றனர். இந்தக் கருவியை பொருத்தியவர்களுக்கு இரு வாரங்களில் மூன்றரைக் கிலோ வரை எடை குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்தக் கருவிக்கு எதிராக, ஏராளமான நெட்டிசன்கள் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.