உலகம்

ஹெச்1-பி விசாவில் மாற்றமில்லை.. பெருமூச்சுவிட்ட 5 லட்சம் இந்தியர்கள்..!

ஹெச்1-பி விசாவில் மாற்றமில்லை.. பெருமூச்சுவிட்ட 5 லட்சம் இந்தியர்கள்..!

webteam

ஹெச்1-பி வைத்துள்ளவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றம் திட்டமில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஹெச்1-பி விசாவின் அடிப்படையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவில் உள்ளனர். அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ஹெச்-1 விசா முறையில் திருத்தம் செய்யப்போவதாகவும், பிற நாட்டவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். இதனால் இந்திய தொழில்நுட்ப நிறுவன பணியாளர்கள் அச்சத்தில் இருந்தனர். 

இந்நிலையில் ஹெச்-1 பி வைத்துள்ளவர்களை வெளியேற்றும் திட்டமில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. அத்துடன் விசா முறையில் மாற்றம் செய்தால் கூட, ஹெச்1-பி விசா உள்ளவர்கள் வெளியேற்றப்படமாட்டர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஏசி21 பிரிவு 106 விதியின் படி அவர்களுக்கு 1 வருட காலநீட்டிப்பு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.