உலகம்

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வெளியேற ஒப்பந்தம்: 48 மணி நேரம் கெடு!

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வெளியேற ஒப்பந்தம்: 48 மணி நேரம் கெடு!

webteam

சிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதியில் இருந்து ஜெய்ஷ் அல் இஸ்லாம் என்ற கடைசி கிளர்ச்சியாளர்கள் குழு வெளியேற ஒப்புக் கொண்டது. 

நேற்று நடத்திய ரசாயனத் தாக்குதலில் 70-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து ரஷ்யா வெளியுற வுத் துறை அமைச்சகம், கிளர்ச்சியாளர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் போர் நிறுத்தம் உடன்படிக்கை ஏற் பட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து கிளர்ச்சியாளர்கள் தங்கள் குடும்பங்களுடன் டவுமா பகுதியில் இருந்து வெளியேற ஒப்புக் கொண்டனர். இந்த ஒப்பந்தத்தின் படி 8 ஆயிரம் கிளர்ச்சியாளர்கள் மற்றும்‌ அவர்களின் குடும்பத்தினர் சுமார் 40 ஆயிரம் பேர் வெளியேற உள்ள தாக ரஷ்ய ராணுவப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளர்ச்சியாளர்கள் வெளியேறுவதற்காக 100 பேருந்துகள் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய ராணுவப் படைத் தளபதி யூரி தெரிவித்துள்ளார். அடுத்த 48 மணி நேரத்தில் வெளியேற கெடு விதிக்கப்பட்டதாக சிரியா அரசு தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.