கமலா ஹாரிஸ் முகநூல்
உலகம்

அதிபர் தேர்தலில் தோல்வியை தழுவிய கமலா ஹாரிஸ்!முன்வைக்கப்படும் காரணங்கள் என்ன?

இந்த பொறுப்புக்கு வந்த முதல் பெண், முதல் ஆப்ரிக்க-அமெரிக்கன் அல்லது முதல் இந்திய அமெரிக்கன் என்ற பெருமை பெற்றவர். முதல் பெண் துணை அதிபரானவரும் கமலாதான். வெற்றி பெற்றிருந்தால் இன்னும் பல சிறப்புகளுக்கு சொந்தக்காரராகி இருப்பார் கமலா.

PT WEB

அமெரிக்காவின் முதல் பெண் அதிபராகும் வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறார் கமலா ஹாரிஸ். வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கமலாவின் தோல்விக்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

" தன்னை தத்தெடுத்துக்கொண்ட மண்ணில், மாயாவையும் என்னையும் கறுப்பின பெண்களாகத்தான் பார்ப்பார்கள் என்பதை என் தாய் நன்கு அறிந்திருந்தார். எங்களை தன்னம்பிக்கையுடனும், பெருமை மிக்க கறுப்பின பெண்களாகவும் வளர்ப்பதில் அவர் உறுதியாக இருந்தார் " - இவை The Truths We Hold' என்ற தனது சுயசரிதை புத்தகத்தில் கமலா ஹாரிஸ் குறிப்பிட்டிருந்த வரிகள்.

கமலா வெற்றி பெற்றிருந்தால், உலகின் உச்ச அதிகாரம் பெற்ற அமெரிக்காவின் அதிபராக இருந்திருப்பார். கமலா ஹாரிஸ் பல சிறப்புகளுக்கு முன்னோடி. சான் பிரான்சிஸ்கோவின் மாவட்ட அரசு வழக்கறிஞராக இருந்தவர்.

இந்த பொறுப்புக்கு வந்த முதல் பெண், முதல் ஆப்ரிக்க-அமெரிக்கன் அல்லது முதல் இந்திய அமெரிக்கன் என்ற பெருமை பெற்றவர். முதல் பெண் துணை அதிபரானவரும் கமலாதான். வெற்றி பெற்றிருந்தால் இன்னும் பல சிறப்புகளுக்கு சொந்தக்காரராகி இருப்பார் கமலா.

அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டவர் ஜோ பைடன். அவரது பரப்புரைக் கூட்டங்களில் நடந்த சம்பவங்களும், முதுமை தந்த பிரச்னைகளுமாக பைடனின் நடவடிக்கைகள் விமர்சனத்துக்கு ஆளான நிலையில்தான், கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அறிவிக்கப்பட்ட வேகத்தில் ட்ரம்புடன் நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் கமலா வாதிட்ட விதம் அவர் மீதான நேர்மறைக் கருத்துகளை உருவாக்கியது. தொடர்ந்து பெண்கள் உரிமை, கருக்கலைப்பு உரிமை, குடியேற்றம், வரிகள் குறைப்பு என கமலாவின் பரப்புரைகள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தின.

கடைசி நேரம்வரை ட்ரம்ப்புக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்திய வலிமையான போட்டியாளராகவே இருந்த கமலா, அதிபர் தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளார்.

தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்தவராக, நாட்டின் முதல் பெண் துணை அதிபராக இருக்கும் கமலா, நாட்டின் முதல் அதிபர் என்ற உச்ச அதிகாரத்தை பெற தடையாக பல பிரச்னைகள் முன்வைக்கப்படுகின்றன.

ஜோ பைடன் விலகியதற்கு பிறகு, வெறும் நான்கு மாதங்களில் தேர்தல் பிரச்சாரத்தில், கமலா ஹாரிஸை களமிறக்கியது. கறுப்பினத்தவர் மற்றும் லத்தீன் வாக்காளர்களின் வாக்குகள் 4 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட தற்போது ஜனநாயகக் கட்சிக்கு குறைந்துள்ளது. அதேபோல 2020ல் ஜோ பைடனுக்கு 57% பெண்கள் வாக்களித்தநிலையில், இப்போது கமலாவுக்கு 54% பெண்கள்தான் வாக்களித்துள்ளனர். தோல்வி உறுதியான சூழலில், ஹோவர்டில் கமலாவின் பேச்சை கேட்க குவிந்திருந்த அவரது ஆதரவாளர்கள் சோகத்துடன் கலைந்து சென்றனர். கொண்டாட்டங்களில் ஈடுபட தயாராக இருந்த அந்த இடம், சில மணிநேரங்களில் பேரமைதியை தழுவிக்கொண்டது.