உலகம்

எங்கு தேடினாலும் கிடைக்காத இரண்டாம் எலிசபெத்தின் கர்ப்பகால புகைப்படம்.. இதான் காரணம்!

எங்கு தேடினாலும் கிடைக்காத இரண்டாம் எலிசபெத்தின் கர்ப்பகால புகைப்படம்.. இதான் காரணம்!

Abinaya

வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் தன்னுடைய 96 வயதில் உடல்நல குறைவால் காலமானார். அவரது இறுதி ஊர்வளங்கள் நடைப்பெற்று கொண்டியிருக்கிறது. 

இரண்டாம் எலிசபெத்தின் பல புகைப்படங்கள் பார்த்திருப்போம். அவரது சின்ன வயதிலிருந்து தொடங்கி இறக்கும் வரை தினசரி அடிப்படையில் பல புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளன.

தசாப்தங்களாக பொதுமக்களின் பார்வையில் தனது வாழ்நாளைச் செலவழித்த இரண்டாம் எலிசபெத் தான் வரலாற்றில் அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்டவர்களில் ஒருவர்.

ஆனால் எலிசபெத் மகாராணியின் ஆயிரக்கணக்கான புகைப்படங்களை நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் பார்க்கவும் பதிவிறக்கவும் முடியும் என்றாலும், நாம் எங்கும் காண முடியாத ஒரு எலிசபெத் மகாராணியின் ஒரு வகையான புகைப்படம் உள்ளன.

இரண்டாம் எலிசபெத்துக்கு நான்கு குழந்தைகள், கிங் சார்லஸ் III, இளவரசர் ஆண்ட்ரூ (Duke of York), அன்னே (Princess Royal), மற்றும் இளவரசர் எட்வர்ட் (Earl of Wessex). இந்த நான்குகளில் எந்த குழந்தையாவது கருவுற்று இருக்கும் போது, இரண்டாம் எலிசபெத்தின் பேபி பம்ப் என்று சொல்லக்கூடிய, கர்ப்பமாக வயிற்றுடன் இருக்கும் புகைப்படத்தை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?

இளவரசி டயானா, கேட் மிடில்டன் மற்றும் மேகன் மார்க்லே ஆகியோர் கர்ப்பகால புகைப்படங்கள் பல உள்ளன. ஆனால் இரண்டாம் எலிசபெத்தின் புகைப்படம் மட்டும் ஏன் இல்லை என்று யோசித்துப்பார்த்திருக்கிறார்கள்? தேடினாலும் எங்கும் கிடைக்காது.

ஏன்.. எதனால் என்று உங்களுக்குத் தோன்றினால் அதற்கு ஒரு மர்மமான காரணம் இருக்கிறது. அது, ‘இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கர்ப்பம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் அரச குடும்பத்தின் தரப்பிலிருந்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை’.


பிற நாடுகளில், பிரபலங்கள் மற்றும் அரச குடும்பங்களை சேர்ந்தவர்கள் எப்போதுமே கருவுற்று இருப்பதை, பொது நிகழ்வாக வைத்து, குழந்தை பிரசவிக்கும் தேதி முதல் கொண்டு பெரிய அறிவிப்பாக அச்செய்தியை வெளியிடுவார்கள்.

ஆனால் இரண்டாம் எலிசபெத் இது முற்றிலும் மாறாக நடந்தது. காரணம், அந்த காலத்தில் கர்ப்பத்தை வெளியில் சொல்வது பிரிட்டன் அரச குடும்பத்தைப் பொறுத்தவரைத் தடைசெய்யப்பட்டதாக இருந்தது.

1948ல் தான் இரண்டாம் எலிசபெத் முதல் முறையாகக் கர்ப்பமானார். ஆனால் கர்ப்பம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. முதல் கர்ப்பத்தின் போது எந்த அரண்மனை மைதானத்திலும் அவரது புகைப்படங்கள் எதுவும் இல்லை.

இதைப் போலவே, மருத்துவமனைகளுக்குக் குழந்தைகளை அழைத்தும் செல்லமாட்டார்கள். பிரவசத்தின் போதும், பிறகு குழந்தைகள் வளரும் காலம் வரை. ஆனால் இந்த கட்டுப்பாடுகள், தடைகளை முதலில் உடைத்தவர் இளவரசி டயானா தான். அரண்மனையில் குழந்தை பிறக்கும் பாரம்பரியத்தை உடைத்து, வில்லியம் மருத்துவமனையில் பிரசவித்தார்.