உலகம்

கின்னஸ் சாதனை படைக்கும் அளவுக்கு இந்த 'ஃப்ரன்ச் ஃப்ரைஸில்' அப்படி என்ன இருக்கு?

கின்னஸ் சாதனை படைக்கும் அளவுக்கு இந்த 'ஃப்ரன்ச் ஃப்ரைஸில்' அப்படி என்ன இருக்கு?

JananiGovindhan

அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பல சின்ன சின்ன பொருட்களெல்லாம் உலகின் விலை உயர்ந்த பட்டியலில் இடம்பெற்று வருவது வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

அந்த வகையில், அனைவருக்கும் பிடித்தமான பண்டமாக இருக்கும் french fries உலகின் அதிக விலை கொண்ட பட்டியலில் இணைந்து கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறது.

ஒரு ப்ளேட் ஃப்ரஞ்ச் ஃப்ரைஸ் அதிகபட்சம் 100 முதல் 150 ரூபாய் இருக்குமா? ஆனால் நியூ யார்க்கில் உள்ள பிரபல உணவகத்தில் செய்யப்பட்ட ஒரு ப்ளேட் ஃப்ரஞ்ச் ஃப்ரைஸின் விலை 200 டாலர். அதாவது 15,866 ரூபாய் 43 பைசா.

சரியாகத்தான் படிச்சுட்டு இருக்கீங்க. நியூ யார்க்கின் மான்ஹட்டன் பகுதியில் உள்ளது செரண்டிபிட்டி3 என்ற உலக பிரபலமான உணவகத்தில் தான் 15 ஆயிரம் ரூபாய் விலை கொண்ட ஃப்ரன்ச் ஃப்ரைஸ் விற்கப்படுகிறது.

பல கின்னஸ் சாதனைகளை படைத்த இந்த உணவகம், தேசிய ஃப்ரஞ்ச் ஃப்ரைஸ் தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு 2021 ஜூலை மாதம் கின்னஸ் சாதனை படைத்த ஃப்ரஞ்ச் ஃப்ரைஸை உருவாக்கி தனது மெனுவிலும் சேர்த்திருக்கிறது.

தற்போது நடப்பாண்டு தேசிய ஃப்ரஞ்ச் ஃப்ரைஸ் தினம் வருகிற ஜூலை 13ம் தேதி கொண்டாடப்பட இருப்பதால் மீண்டும் தங்களது மெனுவில் சாதனை படைத்த பிரத்யேக ஃப்ரஞ்ச் ஃப்ரைஸை மெனுவில் சேர்க்க இருப்பதாக அந்த உணவகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அப்படி என்ன ஸ்பெஷல் அந்த ஃப்ரஞ்ச் ஃப்ரைஸில் இருக்குனு பார்க்கலாம்:

மெயின் ingredient உருளைக்கிழங்கோடு,

உலகின் முதல் ஷாம்ப்பெயினான Dom Perignon Champagne,

J. LeBlanc French Champagne Ardenne Vinegar,

ஃப்ரான்ஸின் பிரபலமான வாத்து கொழுப்பு,
Guerande Truffle Salt,

truffle oil,

Pecorino Tartufello cheese,

truffle butter,

நேச்சுரல் ப்ளாக் truffle,

ஜெர்சி பசும்பால், ஸ்விஸ் ஃட்ரஃபுள் சீஸ்

23 காரட் கொண்ட உண்ணக் கூடிய தங்கத் துகள்கள்

என இத்தனை உயரிய பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டதாலேயே உலகின் அதிக விலைகொண்ட ஃப்ரஞ்ச் ஃப்ரைஸ் என்ற கின்னஸ் சாதனைக்கு வித்திட்டிருக்கிறது.