உலகம்

பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்

நிவேதா ஜெகராஜா

பக்ரைன் நாட்டில் பத்து ஆண்டுகளாக விசா இல்லாமல் இருந்து நோய்வாய்ப்பட்டு இறந்தவரை பக்ரைன் ரஜினி ரசிகர் மன்றத்தினர் நல்அடக்கம் செய்தனர்.

மயிலாடுதுறை திருவிழந்தூரைச் சேர்ந்தவர் சுரேஷ் ராஜமாணிக்கம் இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக பக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக விசா இல்லாமல் அந்த நாட்டில் வேலை செய்து வந்துள்ளார். திடீரென நோய்வாய்ப்பட்டு அவர் அங்கு இறந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த பக்ரைன் நாட்டு ரஜினி ரசிகர்கள், அவருடைய முகவரியை கண்டறிந்து அவர்கள் குடும்பத்தாரிடம் பேசி அதன் பிறகு இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்தார்கள்.

சுரேஷ் ராஜமாணிக்கம் கூலித் தொழிலாளியாக வேலை செய்துவந்துள்ளார். குறைவான ஊதியத்தில் பக்ரைன் நாட்டில் அவர் பணியாற்றி வந்த நிலையில், அவருடைய அவரது குடும்பம் மயிலாடுதுறையில் வறுமையில் உள்ள சூழ்நிலையில் சுரேஷ் ராஜா மாணிக்கத்தை நல்லடக்கம் செய்த ரஜினி ரசிகர்களுக்கு அவர் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்கள்.