உலகம்

“என் மீது உங்களுக்கு வருத்தம் இருக்கலாம்” - ராஜபக்சே தமிழில் பேச்சு

“என் மீது உங்களுக்கு வருத்தம் இருக்கலாம்” - ராஜபக்சே தமிழில் பேச்சு

webteam

உங்களுக்கு என் மீது வருத்தம் இருக்கலாம் எனவும் ஆனால் உங்கள் வாழ்வை மேம்படுத்த ஜனாதிபதியாக நான் செய்த சேவை உங்களுக்கு நன்றாகத் தெரியும் எனவும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சே இலங்கையின் முன்னாள் அதிபர் ஆவார். 1970 ஆம் ஆண்டு முதன்முதலாக நாடாளுமன்றத்துக்குத் தேர்வாகி 2005 ஆம் ஆண்டு நவம்பர் 19ல் முதன்முதலாக பிரதமராக பொறுப்பேற்றார். 

2010 ஆம் ஆண்டு பிரதமர் தேர்தலில் இரண்டாம் தடவையாக இவர் தேர்வானார். மூன்றாவது தடவையாக 2015 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு மைத்திரிபால சிறிசேனவிடம் தோற்று பதவியில் இருந்து விலகினார்.

இந்நிலையில் மகிந்த ராஜபக்சே மக்களிடம் தமிழில் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “அன்பர்களே நண்பர்களே வணக்கம். சலாம் அலைக்கும். பத்து வருடத்திற்கு முன் நாம் சமாதானத்தை ஏற்படுத்தினோம். எமது தாய்நாட்டில் இன்று அது சிதறி உள்ளது. இது எனக்கு மிகவும் மனவேதனையாக உள்ளது. உங்களுக்கு என் மீது வருத்தம் இருக்கலாம். ஆனால் உங்கள் வாழ்வை மேம்படுத்த ஜனாதிபாதியாக நான் செய்த சேவை உங்களுக்கு நன்றாகத் தெரியும். 5 வருஷத்திற்கு முன்னால் புதிய அரசுக்கு நாம் ஆதரவு கொடுத்தோம். அன்று தமிழ் தலைவர்களும் ஒன்று சேர்ந்துதான் இந்த நாட்டை என்னிடம் இருந்து பிரித்தெடுத்தார்கள். 

தமிழ்ப் பேசும் மக்களுக்கு சேவை செய்ய என்னோடு சேராத அவர்கள் இந்த அரசுக்கு ஆதரவு கொடுத்தார்கள். இன்றைய அரசின் செயல்பாடுகளுக்கு அவர்களும் பங்காளிகள் தான். இங்கு வாழும் எல்லா மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும். சந்தோசமாக வாழ வேண்டும். அந்த நாளை உருவாக்க நான் மீண்டும் பாடுபடுவேன். இது நிச்சயம். நான் சொல்வதை செய்பவன். செய்வதையே சொல்பவன். நாளை நமதே” எனத் தெரிவித்துள்ளார்.