உலகம்

ஈகைத் திருநாளை முன்னிட்டு பாகிஸ்தானில் களைகட்டும் கால்நடை சந்தை

ஈகைத் திருநாளை முன்னிட்டு பாகிஸ்தானில் களைகட்டும் கால்நடை சந்தை

webteam

ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி பாகிஸ்தானில் கால்நடை சந்தை களைகட்டத் தொடங்கியுள்ளது.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ஈகைத் திருநாள் வரும் 2 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இந்தத் திருநாளையொட்டி வறியவர்களுக்கு கால்நடைகளை வழங்குவது, இறைச்சிகளை வழங்குவது உள்ளிட்ட நற்காரியங்களில் இஸ்லாமியர்கள் ஈடுபடுவார்கள். இதன் காரணமாக பாகிஸ்தானின் கராச்சி, லாகூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள கால்நடை சந்தை களைக்கட்டத் தொடங்கியுள்ளது.

அதே சமயம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஓட்டகம், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருப்பதால் நுகர்வோர்கள் கடுமையாக அதிருப்தி அடைந்துள்ளனர். ஈகைத் திருநாளை முன்னிட்டு பாகிஸ்தானில் மட்டும் சுமார் ஒரு கோடி கால்நடைகள் வெட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.