உலகம்

`நட்பு பட்டியலில் இல்லாத நாடுகள், ரூபிளில் தொகையை செலுத்துங்க...’- அதிபர் புடின் அதிரடி

`நட்பு பட்டியலில் இல்லாத நாடுகள், ரூபிளில் தொகையை செலுத்துங்க...’- அதிபர் புடின் அதிரடி

நிவேதா ஜெகராஜா

ரஷ்யாவிடம் எரிவாயு வாங்கும் நட்பில் இல்லாத நாடுகள் அதற்கான பணத்தை தங்கள் நாட்டின் ரூபிள் பணமாக மட்டுமே செலுத்த வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அந்நாடு மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ளன. இதனால் ரஷ்ய பணமான ரூபிளின் மதிப்பு சரிந்து அந்நாடு பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தங்களிடம் எரிவாயு வாங்கும் `நட்பு பட்டியலில் இல்லாத நாடுகள்’ ரூபிளாக மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

<iframe width="853" height="480" src="https://www.youtube.com/embed/uJ0T92jYQ00" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

இதற்காக எரிவாயு வாங்குபவர்களுக்கு ரூபிள் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தங்கள் நாட்டு வங்கி அதிகாரிகளுக்கு புடின் உத்தரவிட்டுள்ளார். ஐரோப்பாவில் உள்ள நாடுகள் பலவும் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்த போதும் அந்நாட்டிடம் இருந்து தொடர்ந்து இயற்கை எரிவாயுவை வாங்கி வருகின்றன. புடினின் தற்போதைய அறிவிப்பால் அவை ரஷ்ய ரூபிளை வாங்கியாக வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஐரோப்பிய நாடுகள் தள்ளப்பட்டுள்ளன.