உலகம்

ரஷ்யா நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் புதினின் கட்சி அமோக வெற்றி

ரஷ்யா நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் புதினின் கட்சி அமோக வெற்றி

Sinekadhara

ரஷ்யா நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் புதினின் கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் கடந்த 17ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடன் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கப்பட்டது. 98 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதிபர் புதினின் ஐக்கிய ரஷ்யா கட்சி 50 சதவிகித விழுக்காடு வாக்குகளையும், கம்யூனிஸ்ட் கட்சி 20 சதவிகிதத்துக்கும் குறைவான வாக்குகளையும் பெற்றதாக முடிவுகள் கூறுகின்றன. கடந்த 2016ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் அதிபர் புதினின் கட்சி 54 சதவிகித வாக்குகள் பெற்றிருந்தது.

இந்த நிலையில் வாக்குப்பதிவில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. முக்கிய எதிர்க்கட்சி தலைவரை சிறையில் அடைத்ததோடு, சில கட்சியைச் சேர்ந்தவர்களை போட்டியிட அனுமதிக்கவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனிடையே, தேர்தல் முடிவுகளை எதிர்த்து மாஸ்கோவில் எதிர்க்கட்சியினர் பேரணி நடத்தினர்.