உலகம்

அமெரிக்க அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்: புதின்

webteam

ரஷ்யாவில் உள்ள தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை அமெரிக்கா குறைக்க வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கும் மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதனால் அமெரிக்கா மீது அதிருப்தி அடைந்துள்ளது ரஷ்யா. இதன் எதிரொலியாக ரஷ்யாவில் பணியாற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என புதின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 755- அமெரிக்க அதிகாரிகள் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என்று புதின் உத்தரவிட்டதாக செய்தி வெளியானது. ஆனால், ரஷ்ய அரசுக்கு சொந்தமான, ரஷ்யா 24 சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், அதிகாரிகள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று, தான் சொன்னதாக புதின் தெரிவித்தார்.

தூதரக மற்றும் தொழில்நுட்ப வல்லுநனர்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்டோர் ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றி வருகின்றனர் என்றும் அதை 755-பேராக குறைக்க வேண்டும் என்றும் புதின் கூறியுள்ளார்.