உலகம்

10 குழந்தைகள் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு - ரஷ்ய அதிபர் புடின் அதிரடி அறிவிப்பு

10 குழந்தைகள் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு - ரஷ்ய அதிபர் புடின் அதிரடி அறிவிப்பு

JustinDurai

ரஷ்யாவில் மக்கள் தொகையை அதிகரிக்கும் நடவடிக்கையாக பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.

ரஷ்யாவில் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். இந்த விருது பெரும் தாய்மார்களுக்கு 13,500 பவுண்ட் (இந்திய ரூபாய் மதிப்பில்  கிட்டத்தட்ட 13 லட்சம்) மொத்தத் தொகையாக கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த விருதை 10 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்ற ரஷ்ய குடிமக்கள் மட்டுமே பெறமுடியும்.  தாய்மார்கள் தங்களின் 10-வது குழந்தைக்கு ஒரு வயது நிறைவடைந்தவுடன் இந்தப் பரிசுத்தொகை கிடைக்கும். போரிலோ, பயங்கரவாதச் செயலிலோ அல்லது ஏதேனும் அவசரச் சூழ்நிலையிலோ ஒரு குழந்தையை இழந்தாலும் அவர்கள் விருதுக்கு தகுதி பெறுவார்கள்.

சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்யாவின் மக்கள்தொகை சரிவை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் மக்கள் தொகையை அதிகரிக்கும் நடவடிக்கையாக அதிக குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படுவது இது முதல்முறை அல்ல. ரஷ்யாவில் இதற்கு முன்னர் 1940களிலும் மக்கள்தொகை பெருக்கத்தை உண்டுபண்ண இந்தத் திட்டம் அமலில் இருந்தது.

இதையும் படிக்க: துருக்கி: தன்னை கடித்த பாம்பை திருப்பிக் கடித்து கொலை செய்த 2 வயது துணிச்சல் சிறுமி!