உலகம்

பயங்கரவாதிகளைச் சுட ரஷ்ய அதிபர் உத்தரவு

webteam

ரஷ்யாவின் சூப்பர் மார்க்கெட்டில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்வத்திற்கு அந்நாட்டின் அதிபர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் புதின், பயங்கரவாதிகளை கொன்று குவிக்குமாறு ஆவேசம் பொங்க தெரிவித்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் இயங்கி வரும் சூப்பர் மார்க்கெட் பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் கர்ப்பிணி பெண் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர். 

இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அதிபர் புதின் பயங்கரவாதத்தை ஒடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் ஆயுதங்களுடன் வரும் பயங்கரவாதிகளை சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லும்படி உத்தரவிட்டுள்ளார்.