உலகம்

ரஷிய அதிபருடன் தொலைபேசியில் உரையாற்றுகிறார் டொனால்டு டிரம்ப்..!

ரஷிய அதிபருடன் தொலைபேசியில் உரையாற்றுகிறார் டொனால்டு டிரம்ப்..!

webteam

அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் இன்று ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் உரையாற்றவுள்ளார்.

அமெரிக்காவின் அதிபராக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் கடந்த 20-ஆம் தேதி பதவியேற்றார். புதிய அதிபராக பதவியேற்ற பின் டொனால்ட் ட்ரம்ப் உலகத் தலைவர்கள் பலருடன் தொலைபேசியில் பேசி வருகிறார். கனடா, மெக்சிகோ, எகிப்து மற்றும் இஸ்ரேல் தலைவர்களுடன் பேசியுள்ளார். இந்திய பிரதமர் மோடியுடனும் கடந்த வாரம் தொலைபேசியில் உரையாற்றினார்.

இந்நிலையில், தற்போது ரஷிய அதிபர் புதினுடன், இன்று தொலைபேசியில் உரையாற்றவுள்ளார். அப்போது இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே-வை வெள்ளை மாளிகையில் டொனால்டு டிரம்ப் சந்திக்கவுள்ளார்.