உலகம்

லண்டனில் பெண் மந்திரியை திருடி, திருடி என கூச்சலிட்ட பாகிஸ்தான் மக்கள் !

லண்டனில் பெண் மந்திரியை திருடி, திருடி என கூச்சலிட்ட பாகிஸ்தான் மக்கள் !

Abinaya

பாகிஸ்தான் நாட்டில் தகவல் துறை அமைச்சரும் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளுமான மரியும் அவுரங்கசீப் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள காபி கடைக்குச் சென்ற போது, வெளிநாட்டு வாழ் பாகிஸ்தானியர்கள் மரியும் அவுரங்கசீப்பை முற்றுகையிட்டுத் திருடி திருடி எனக் கூச்சலிட்டனர்.

பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புகளால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தும் , 3 கோடிக்கும் அதிகமான மக்கள் நிவாரணம் பெற அவதிப்பட்டு வரும் சூழலும் நிலவி வருகிறது. பாகிஸ்தான் அரசு நிவாரணம் அளிப்பதில் பாகுபாடு காட்டிவருகிறது எனவும் ஊழல் அதிகரித்துவிட்டது எனவும் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர் குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, ஆடியோ உரையாடல் ஒன்றும் கசிந்ததால் பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடிகள் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் துறை அமைச்சரும் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளுமான மரியும் அவுரங்கசீப் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள காபி கடைக்குச் சென்ற போது , தெருவில் அவரை பின் தொடர்ந்து வந்த வெளிநாட்டு வாழ் பாகிஸ்தானியர்கள், அவரை திருடி, திருடி எனக் கூறி கூச்சலிட்டு கடுமையாக விமர்சித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்த மரியும் அவுரங்கசீப், ’’இம்ரான் கானின் வெறுப்பு மற்றும் பிரிவினைக்கான அரசியல் நம்முடைய சகோதர, சகோதரிகளிடையே நஞ்சாகப் பாதித்து உள்ளது, காண்பதற்கு வருத்தம் அளிக்கிறது. அவரின் ஆதரவாளர்களாகத் தொடர்ந்து தொல்லைக்கு ஆளாகி வருகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.