வங்கதேசம் முகநூல்
உலகம்

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு: இயல்பு நிலையை அடைந்ததா வங்கதேசம்?

PT WEB

சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீட்டு முறையை நீதிமன்றம் ரத்து செய்ததன் எதிரொலியாக வங்கதேசத்தில் படிப்படியாக இயல்பு நிலை திரும்புகிறது. வங்கதேச தலைநகர் டாக்காவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, வழக்கம்போல் வணிக நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கடைகள் மீண்டும் இயங்கத் தொடங்கியதால், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க சந்தைகளில் பொதுமக்கள் அதிக அளவில் கூடினர்.

வங்கதேச வன்முறை

முன்னதாக வங்கதேச சுதந்திர போராட்டத்தின்போது போராடியவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்ததற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. அப்போது ஏற்பட்ட வன்முறைகளில் சிக்கி 114 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, இதுதொடர்பான வழக்கை விசாரித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம், அரசு வேலைகளில் 93 சதவீத பணியிடங்கள் தகுதி அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்தது. இதையடுத்து வங்கதேசத்தில் முன்னதாக வெடித்த வன்முறை தற்போது முடிவடைந்து, இயல்பு நிலைக்கு அந்நாடு திரும்பியுள்ளது.