ஹெச்1 பி விசா விவகாரத்தில் அமெரிக்கா தனது கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொள்ளாததால், 5 லட்சம் இந்தியர்கள் அங்கிருந்து வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு பணியாளர்களுக்கு ஹெச்1 பி விசா வழங்குகின்றன. அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற முழக்கத்தை முன் வைத்து அதிபரான ட்ரம்ப், ஹெச்1 பி விசா வழங்கும் நடைமுறையில் கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார்.
இந்நிலையில் வெளிநாடுகளை சேர்ந்தோருக்கு 6 ஆண்டுகள் முடிந்த பின்னரும் கிரீன் கார்டு பெறுவதற்கான நடைமுறைகள் நிறைவடையவில்லை எனில் அவர்களுக்கு விசா நீட்டிப்பு வழங்க முடியாது என அமெரிக்கா கூறியுள்ளது. இதனால் அமெரிக்காவிலிருந்து 5 லட்சம் இந்தியர்கள் வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது.