இளவரசி டயானாவின் திருமண ஆடை தற்போது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
1981 ஆம் ஆண்டு இளவரசி டயானா இளவரசர் சார்லஸை மணமுடித்தார். இவர்களது திருமணம் லண்டனில் உள்ள செயின்ட் பால் கதீட்ரல் ஆலயத்தில் வைத்து நடந்தது. இந்த திருமணத்தில் டயானா ivory taffeta என்ற கவுனை திருமண ஆடையாக அணிந்து வந்திருந்தார். இதனை டேவிட் மற்றும் எலிசபெத் இமானுவேல் என்ற ஆடை வடிவமைப்பாளர்கள் வடிவமைத்திருந்தனர். இந்த கவுன் டஃபேட்டா மற்றும் பழங்கால லேசால் ஆனது.
இதனை தற்போது டயானாவின் மகன்களான இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹாரி ஆகியோர் கண்காட்சிக்காக கடன் கொடுத்துள்ளனர். 27 அடி கொண்ட இந்த கவுண் தற்போது கென்சிங்டன் அரண்மனையில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு டயானா தனது கணவரை விவாகரத்து செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.