உலகம்

முதல் நாளே நோயாளியின் காதில் பல்லி - இளம் பெண் மருத்துவரின் மறக்க முடியாத நாள்

முதல் நாளே நோயாளியின் காதில் பல்லி - இளம் பெண் மருத்துவரின் மறக்க முடியாத நாள்

webteam

தாய்லாந்து நாட்டில் ஒரு மருத்துவர் தனது முதல் நாள் பணியில் நோயாளி காதிலிருந்து சிறிய பல்லியை வெளியில் எடுத்துள்ளார். 

தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் வரண்யா நகாந்தாவி. இவர் மருத்துவப் படிப்பை தற்போது முடித்துள்ளார். இதனையடுத்து அங்குள்ள ஒரு மருத்துவமனையில் பணியில் சேர்ந்துள்ளார். இதனையடுத்து இவர் தனது முதல் நாள் பணிக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு நபர் தனக்கு காது வலி என்று வந்துள்ளார். 

அதன்பின்னர் அவரது காதை சோதனை செய்து பார்த்தப்போது அவரின் காதிற்குள் ஒரு சிறிய பல்லி இருந்ததை கண்டுபிடித்தார். இதனைத் தொடர்ந்து இந்த நபரின் காதிற்குள் இருந்து வெளியே எடுத்தார். அப்போது அந்தப் பல்லி உயிருடன் இருந்தைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார். எனினும் இந்த நபரை மீண்டும் காது மருத்துவரிடம் செல்லும் படி அறிவுறுத்தினார். 

பொதுவாக மருத்துவர்களுக்கு தங்களின் முதல் நாள் பணியை மிகவும் சிறப்பாக கருதி அதனை மறக்க மாட்டார்கள். அதேபோல வரண்யா நகாந்தாவிக்கு தனது முதல் நாள் பணியில் முதல் நோயாளியே என்றும் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.