புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்தபோது, பெண்ணின் கையை தட்டிவிட்டதற்கு போப் ஃபிரான்சிஸ் வருத்தம் தெரிவித்தார்.
செவ்வாயன்று, வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பேராலயத்தில், போப் ஃப்ரான்சிஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, அங்கு கூடியிருந்த மக்களுக்கு போப் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது சிலருக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்து விட்டு, அங்கிருந்து புறப்பட முயன்றார்.
இதனால், கூட்டத்திலிருந்த பெண் ஒருவர், போப்பின் கையை திடீரென பிடித்து இழுத்தார். இதனால், கோபமடைந்த அவர், பெண்ணின் கையை இருமுறை தட்டிவிட்டார். இந்நிகழ்வு சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு ஆளானது. இதற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரிய போப் ஃபிரான்சிஸ், வாழ்வின் ஆதாரமே பெண்கள்தான் எனக் கூறியுள்ளார்.