பெரு நாட்டில் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத பெண்ணிடம் அபராதம் வசூலிப்பதற்கு பதிலாக முத்தம் கேட்ட போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
முத்தக்காட்சி பெருவின் ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதால் பெயர் வெளியிடப்படாத அந்த காவலரை தற்காலிகமாக பணிநீக்கம் செய்து பெரு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
வீடியோவில் முதலில் அபராதம் வசூலிப்பதற்காக விதிமுறைகளைப் பின்பற்றாத பெண்ணை நெருங்குகிறார் அந்த காவலர். பின்பு தனது மனதை மாற்றிய அவர் அந்த பெண்ணுக்கு முத்தம் கொடுத்து அவரிடம் அபராதம் வசூலிக்காமல் செல்லவிடுகிறார்.
மேலும் இந்த விவகாரம் பெருவின் தலைநகரமான லிமா அமைந்துள்ள மிராஃப்ளோர்ஸ் மாவட்ட மேயருக்கு தெரியவந்ததால் அந்த காவலரின் மீது விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.