உலகம்

‘ராமர் பிறந்தது நேபாளத்தில்தான், அயோத்தியும் இங்குதான் உள்ளது’ : நேபாள பிரதமர்

‘ராமர் பிறந்தது நேபாளத்தில்தான், அயோத்தியும் இங்குதான் உள்ளது’ : நேபாள பிரதமர்

webteam

ராமர் பிறந்தது நேபாளத்தில்தான், அயோத்தியும் அந்நாட்டில்தான் உள்ளது என்று நேபாள பிரதமர் கேபி ஷர்மா ஒலி கூறியுள்ளார்.

இந்தியாவில் உள்ள இந்து மதத்தை நம்பக்கூடிய மக்களுக்கு ராமர் கடவுளாகவும், அவர் பிறந்த இடம் அயோத்தி என்று நம்பப்படுகின்றது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்றன. உச்சநீதிமன்றமும் இந்த ஆண்டில் அனுமதியும் அளித்து இருக்கிறது. இந்தியாவில் அதனை வைத்து மிகப்பெரிய ஆன்மீகத்தையும் தாண்டிய அரசியலும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ராமர் பற்றியும், அவர் பிறந்ததாக கருதப்படும் அயோத்தி பற்றியும் நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி கருத்து தெரிவித்துள்ளார். அதாவது ராமர் பிறந்தது நேபாளத்தில் தான் என்றும் அயோத்தியும் நேபாளத்தில் தான் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவுக்கும், நேபாளத்திற்கு இடையே எல்லை பிரச்னை தொடர்பாக முரண்பாடுகள் நாளுக்கு நாள் வலுத்துவரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.