pm modi, us president biden pt web
உலகம்

அமெரிக்காவில் பிரதமர் மோடி.. கைகுலுக்கி உற்சாகமாக வரவேற்றார் அதிபர் பைடன்.. சந்திப்பில் நடந்ததென்ன?

அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடனை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது உலகளாவிய பிரச்னைகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர்.

PT WEB

3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார். பிலடெல்பியா சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்க ஏரளாமான இந்திய வம்சாவளியினர் குவிந்தனர். பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி சிறிது நேரம் கலந்துரையாடினார். தொடர்ந்து, டெலவர் நகருக்கு சென்ற பிரதமர் மோடிக்கு ஹோட்டலில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் நடனமாடி வரவேற்பு அளித்தனர். நடனத்தை கண்டு ரசித்த பிரதமர், கைதட்டி அவர்களை பாராட்டினார்.

பின்னர் டெலவர் நகரில் உள்ள அதிபர் ஜோ பைடன் இல்லத்திற்கு சென்ற பிரதமர் மோடியை, பைடன் கை குலுக்கியும், கட்டி அணைத்தும் உற்சாகமாக வரவேற்றார்.

இந்த சந்திப்பின்போது இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவை மேம்படுத்துவது, இருநாடுகளின் உலகளாவிய கூட்டு யுக்தியை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசித்தனர். பின்னர் பைடன் தனது ஆட்சிக்காலத்தில் இருநாடுகளின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டியதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, பிராந்தியம் மற்றும் உலக அளவில் நடைபெறும் பிரச்னைகள் மற்றும் அதனை தடுப்பதற்கான கூட்டு முயற்சிகள் தொடர்பாக அதிபர் ஜோ பைடனுடன் கலந்துரையாடியதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது அமெரிக்கா மற்றும் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.