உலகம்

பயங்கரவாதத்தை பிரிப்பது பேராபத்து: பிரதமர் மோடி

பயங்கரவாதத்தை பிரிப்பது பேராபத்து: பிரதமர் மோடி

Rasus

பயங்கரவாதத்தை நல்ல பயங்கரவாதம், தீய பயங்கரவாதம் என பிரித்து குறிப்பிடுவது பயங்கரவாதத்தை விட பெரிய ஆபத்தை விளைவிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்து வரும் சர்வதேச பொருளாதார சபை மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, அமைதியை நிலைநாட்டுவதில் உலகம் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தார். இதுதவிர பருவ நிலை மாற்ற பிரச்னையும் உலகிற்கு பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ளதாக பிரதமர் அச்சம் தெரிவித்தார்.

உலகில் வலிமை மிகுந்ததாக புதிதாக உருவெடுத்துள்ள நாடுகளால் சர்வதேச அளவில் பொருளாதார மற்றும் அரசியல் சமன்பாடுகள் மாறியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். இது உலகின் எதிர்காலம் மாற உள்ளதைக் காட்டுவதாகவும் பிரதமர் பேசினார். உலக பொருளாதார சபை மாநாட்டில் 20 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய இந்திய பிரதமர் தேவ கவுடா பங்கேற்றதாக குறிப்பிட்ட மோடி, அப்போதிருந்ததை விட இப்போது இந்திய பொருளாதாரம் 6 மடங்கு அதிகரித்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். பயங்கரவாதத்தை நல்ல பயங்கரவாதம், தீய பயங்கரவாதம் என பிரித்து குறிப்பிடுவது பயங்கரவாதத்தை விட பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.