உலகம்

‘காயம்பட்ட வெள்ளை நிறமுடையவரை தோளில் சுமந்த கருப்பு நிற மனிதர்’: வைரலான புகைப்படம்

‘காயம்பட்ட வெள்ளை நிறமுடையவரை தோளில் சுமந்த கருப்பு நிற மனிதர்’: வைரலான புகைப்படம்

webteam

லண்டனில் நடைபெற்ற போராட்டத்தின் போது காயமடைந்த வெள்ளை நிறமுடைய நபரை, கருப்பு நிறமுடைய நபர் தன்னுடய தோள்களில் சுமந்து சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

ஜார்ஜ் ஃபிராய்டின் மரணம் ஒட்டுமொத்த அமெரிக்காவையே புரட்டி போட்டுவிட்டது. இந்த மரணத்திற்கு நீதி கேட்டும் நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அமெரிக்கா முழுவதும் தீவிரமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது அமெரிக்காவையும் தாண்டி பல்வேறு நாடுகளில் நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதில், நிறம், மதம் என எவ்வித வேறுபாடும் இன்றி அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்கின்றனர். ஏன், ஜார்ஜ் ஃபிராய்டு மரணத்திற்கு ஒரு போலீஸ் அதிகாரியே காரணமாக இருக்கும் நிலையில், அந்நாட்டு காவல்துறையினர் பலர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிறவெறி எதிர்ப்பு போராட்டங்களில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. காவல்துறையினருக்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பூங்கொத்து கொடுத்த நிகழ்வு அனைவரையும் நெகிழ வைத்தது. அப்படியொரு நெகிழ்ச்சியாக நிகழ்வு லண்டன் நகரில் நிகழ்ந்துள்ளது.

அதாவது, லண்டன் நகரில் நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜார்ஜ் ஃபிளாய்டு மரணத்திற்கு நீதி கேட்டும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அந்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் லேசான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவங்களை அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர் படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, கருப்பு நிறமுடைய ஒருவர் தன்னுடைய தோள்களில் காயமடைந்த வெள்ளை நிற நபர் ஒருவர் தூக்கிக் கொண்டு வந்துள்ளார். இதனை அந்த பத்திரிக்கையாளர் அழகாக படம் பிடித்துள்ளார்.

அந்த பத்திரிகையாளர் தன்னுடைய சமூக வலைதளத்தில் அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த படம் சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் பரவியது. ஊடங்களிலும் செய்தியானது. அந்த கருப்பின நபரின் பெயர் பேட்ரிக் ஹட்சின்சன் என்பதும் அவர் ஒரு பயிற்சியாளர் என்பது தெரியவந்துள்ளது. ஹட்சின்சன் தன்னுடைய சமூக வலைதளத்தில், “நாங்கள் ஒருவருடைய வாழ்க்கையை இன்று காப்பாற்றியுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.