உலகம்

பிலிப்பைன்ஸ் நிலச்சரிவு: ஃப்ரிட்ஜூக்குள் 20 மணி நேரம் பதுங்கி உயிர்பிழைத்த சிறுவன்!

பிலிப்பைன்ஸ் நிலச்சரிவு: ஃப்ரிட்ஜூக்குள் 20 மணி நேரம் பதுங்கி உயிர்பிழைத்த சிறுவன்!

நிவேதா ஜெகராஜா

நிலச்சரிவிலிருந்து தப்பிக்க குளிர்சாதன பெட்டிக்குள் பதுங்கியிருந்த சிறுவன் உயிர்பிழைத்த அதிசய சம்பவம் பிலிப்பைன்ஸில் நிகழ்ந்துள்ளது.

பிலிப்பைன்ஸில் மெகி புயலின் தாக்கத்தால், பேபே நகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவு சரிவு ஏற்பட்டது. அப்போது சிஜே ஜஸ்மே என்ற 11 வயது சிறுவன் உயிர் பிழைப்பதற்காக வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டிக்குள் பதுங்கியிருந்துள்ளார். இந்நிலையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்ட போது, குளிர்சாதன பெட்டி ஒன்று கிடந்துள்ளது. அதனை திறந்து பார்த்தபோது, சிறுவன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கால்கள் உடைந்த நிலையில் இருந்த சிறுவனை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சுமார் 20மணி நேரத்திற்கும் மேலாக, குளிர்சாதன பெட்டிக்குள் சிறுவன் இருந்தது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், நிலச்சரிவின் போது சிறுவனின் தாய் மற்றும் சகோதரர் மாயமாகியுள்ளனர். மேலும் சிறுவனின் தந்தை உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. தாய் மற்றும் சகோதரரை தேடும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிறுவன் பிழைத்தது அதிசயத்தை கொடுத்தாலும்கூட, அவரது குடும்பத்தினர் பற்றி நம்பிக்கையளிக்கும் வகையில் தகவல்கள் கிடைக்காதது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.