உலகம்

பிரபஞ்ச அழகியாக பிலிப்பைன்ஸ் இளம் பெண் தேர்வு

பிரபஞ்ச அழகியாக பிலிப்பைன்ஸ் இளம் பெண் தேர்வு

webteam

பிலிப்பைன்ஸை சேர்ந்த 24 வயது இளம் பெண் கேட்ரினா க்ரே (catriona gray) இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக தேர்வாகியுள்ளார்.

நடப்பு ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டி தாய்லாந்தின் பாங்காங் நகரில் நடந்தது. மொத்தம் 93 நாடுகளைச் சேர்ந்த இளம் பெண்கள் இந்தப் போட்டியில் பங்கேற்று தங்களது அறிவு திறனை வெளிப்படுத்தினர். அதிகா‌ரம் படைத்த பெண்கள் என்ற தலைப்பில் இந்த ஆ‌ண்டுக்கான போட்டி நடத்தப்பட்டது. 

முன்னாள் பிரபஞ்ச அழகிகள், தொழில்துறையில் கொடி கட்டி பறக்கும் பெண்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் ஆகியோர் நடுவர்களாக அமர்ந்து இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியை தேர்ந்தெடுத்தனர். பல கட்டங்களாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், பிலிப்பைன்ஸை சேர்ந்த கேட்ரினா க்ரே (catriona gray) பிரபஞ்ச அழகியாக தேர்வானார். அவருக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் துதர்தே வாழ்த்து தெரிவித்தார்.

மகுடம் சூடியதும் கேட்ரினா க்ரே மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார். பின்னர் பேசிய அவர், “13 ஆவது வயதில், சிகப்பு நிற ஆடை அணிந்தபோது, பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடப் போவதாக எனது தாய் தெரிவித்தார். அது தற்போது நிஜமாகி விட்டது. அதன் காரணமாகவே சிகப்பு நிற ஆடையை நான் உடுத்தி வந்தேன்’’ என்று தெரிவித்தார்.

இதே போல் மூன்றாம் பாலினத்தவர்களுக்கென முதன்முறையாக நடத்தப்பட்ட பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த ஏஞ்சலா பொன்ஸ் வெற்றிப் பெற்று மகுடம் சூடினார்.