உலகம்

காளைகளை கொல்லும் போட்டி: தடைகோரி போராட்டம்

காளைகளை கொல்லும் போட்டி: தடைகோரி போராட்டம்

webteam

பெரு நாட்டில் ஆண்டுதோறும் நடக்கும் காளை அடக்குதல் விளையாட்டுப் போட்டியில் ஏராளமான காளைகள் கொல்லப்பட்டு வருவதால், அந்த விளையாட்டுக்கு தடை விதிக்கக் கோரி ஆயிரக்கணக்கானோர் ஆர்‌ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பெரு நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் காளை அடக்கும் போட்டியில் ஏராளமான காளைகள் கொல்லப்படுகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் போட்டிக்கு எதிராக பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தடையை மீறி போட்டி நடக்கும் இடத்துக்கு முன்னேறிச் செல்ல முயன்றதால், காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. 

கடந்த 1558 ஆம் ஆண்டு பெருவுக்கு இந்த விளையாட்டை அறிமுகப்படு‌த்திய ஸ்பெயினில் தற்போது காளைகளை கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பெருவில் காளைகள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருவதால், அதற்கு எதிரான போராட்டங்கள் தற்போது தீவிரமடைந்து வருகின்றன.