லெபனான் புதிய தலைமுறை
உலகம்

காஸா சண்டையின் விளைவு - லெபனான் பகுதியிலிருந்து வெளியேறும் மக்கள்!

லெபனானில் 20,000 பேர் வசிப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்குச் சென்றுள்ளதாக ஐநா முகமையின் தகவல் வாயிலாகத் தெரியவந்துள்ளது

PT WEB

அக்டோபர் 7ஆம் நாள் இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து இஸ்ரேலும் பதிலடித் தாக்குதலை தீவிரப்படுத்தியது. இதனால் எழுந்த அச்சுறுத்தல் காரணமாக லெபனானின் தெற்குப் பகுதியில் இருந்து அதிகளவிலான மக்கள் உள்நாட்டிற்குள்ளேயே வேறு இடங்களுக்குச் சென்றதாக தெரியவந்துள்ளது.

காஸா இஸ்ரேல் போர்

புலம்பெயர்வோர் தொடர்பான விவரங்களை சேகரிக்கும் அமைப்பு நடத்திய ஆய்வில் 19,646 பேர் இதுவரை லெபானனிற்குள் வசிப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினரின் தாக்குதல் மற்றும் இஸ்ரேலின் பதில் தாக்குதல் போன்றவற்றின் காரணமாக தெற்கு லெபனானில் இருந்து அதிகம் பேர் வேறு இடங்களுக்குச் சென்றுள்ளதாக நம்பப்படுகிறது. பெரும்பாலானவர்கள் கடற்கரை நகரான TYRE-ல் உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சண்டையினால் பொருளாதார ரீதியில் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளதாக புலம் பெயர்ந்த மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அதே வேளையில் இஸ்ரேலின் வடக்குப்பகுதியில் உள்ள மக்களும் வசிப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்குச் செல்ல அந்நாடு அறிவுறுத்தியுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பினர் 27 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படை கூறியுள்ளது.