உலகம்

"உன்னால் மக்கள் பட்டினியால் சாகிறார்கள்" - கிம் ஜாங் உன்க்கு எதிராக சுவரில் வாசகம்

"உன்னால் மக்கள் பட்டினியால் சாகிறார்கள்" - கிம் ஜாங் உன்க்கு எதிராக சுவரில் வாசகம்

Veeramani

வட கொரியாவில் கிம் ஜாங் உன்னை விமர்சித்து சுவர் விளம்பரம் எழுதப்பட்ட பிறகு, எழுதிய நபரை கண்டுபிடிக்க, பியோங்யாங் நகரில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களிடம் கையெழுத்து மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

பியாங்சோன் மாவட்டத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் சுவர்களில், "கிம் ஜாங் உன், நீ ஒரு பி****யின் மகன். உன்னால் மக்கள் பட்டினியால் செத்து மடிகிறார்கள்" என்ற வாசகங்கள் டிசம்பர் 22 அன்று எழுதப்பட்டிருந்தது. உள்ளூர் அதிகாரிகள் விரைவில் சுவர்களில் இருந்து அந்த செய்தியை அழித்துவிட்டனர். தற்போது நகரின் அனைத்து பகுதிகளிலும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை வைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கைரேகை மாதிரிகளை சேகரிக்கவும், செய்தி வெளியான நாளில் நடந்த விஷயங்கள் குறித்து உள்ளூர் மக்களிடம் தகவல் அறிந்துகொள்ளவும் அதிகாரிகள் அருகிலுள்ள வீடுகள் மற்றும் கடைகளில் விசாரணை நடத்திவருகின்றனர்.

வட கொரியா பஞ்சம் காரணமாக கடுமையான நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்திய வெள்ளம் மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக சீனாவுடனான வடக்கு எல்லை மூடப்பட்டதற்குப் பிறகு உணவு பஞ்ச்ம மோசமாக மாறியுள்ளது.