உலகம்

ஆப்கனில் தலிபான் கைதிகள் விடுதலை... தாமதமாகும் அமைதிப் பேச்சு

ஆப்கனில் தலிபான் கைதிகள் விடுதலை... தாமதமாகும் அமைதிப் பேச்சு

webteam

ஆப்கானிஸ்தானில் அரசுத் தரப்புக்கும் தலிபான் பிரதிநிதிகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி, தலிபான் சிறைக்கைதிகள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, செப்டம்பர் முதல் வாரத்தில்  தோஹா நகரில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தை தாமதமாகியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அரசுக்கு தலிபான் கைதிகள் வைத்த கோரிக்கைகள் தொடர்பாக உருவான முரண்பட்ட நிலையால், ஏற்கெனவே விடுதலை செய்யும் நடவடிக்கைகள் பல மாதங்கள் தாமதமாயின.

தற்போது திங்கட்கிழமையன்று தோஹா செல்லவிருந்த தலிபான் பிரதிநிதிகள் செல்லவில்லை என்றும் அவர்கள் இன்று செல்லக்கூடும் எனவும் ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்தனர். அமைதிப் பேச்சுவார்த்தை நிகழ்வுகள் குறித்து இருதரப்புகளும் திட்டமிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.