பொருளாதார மேம்பாட்டுக்காக பாடுபட்ட ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர்களான பால்.ஆர்.மில்க்ரோம் மற்றும் ராபர்ட்.பி.வில்சனுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்தியை நோபல் கமிட்டி பேராசிரியர் பால் மில்க்ரோமிடம் சொல்ல முயன்றுள்ளது. இருப்பினும் அவரை தொடர்பு கொள்ள முடியாததால் அந்த செய்தியை சக வெற்றியாளர் ராபர்ட் மூலமாக சொல்ல முயன்றுள்ளது.
இருவரும் ஒரே பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவதோடு, ஒரே தெரிவில் வசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன்படி பேராசிரியர் ராபர்டும் நள்ளிரவு 2.15 மணிக்கு பேராசிரியர் பால் வீட்டின் காலிங் பெல் மற்றும் கதவை தட்டி அவரிடம் நோபல் பரிசு வென்ற செய்தியை சொல்லியுள்ளார்.
மேலும் நோபல் கமிட்டியிடம் அவரது செல்போன் நெம்பரை கொடுத்துள்ளதாகவும் அவர் சொல்லியுள்ளார்.
‘அருமை.. இப்போது தான் தெரிந்து கொண்டேன்’ என அதற்கு பேராசிரியர் பாலும் ரிப்ளை கொடுத்துள்ளார்.
இது அனைத்தும் அவரது வீட்டின் செக்யூரிட்டி கேமிராவில் பதிவாகியுள்ளது. அதனை ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகம் ட்விட்டரில் ஷேர் செய்ய தற்போது வைரலாகி வருகிறது.