உலகம்

6 ஜெட் என்ஜின்களுடன் உருவான மெகா விமானம்!

6 ஜெட் என்ஜின்களுடன் உருவான மெகா விமானம்!

webteam

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன், உலகின் மிகப்பெரிய விமானத்தைக் கட்டமைத்துள்ளார்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு பாலைவனத்தில், ஸ்ட்ரேடோலாஞ்ச் என்னும் அந்த விமானத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதன் இறக்கைகள் மட்டும் ஒரு கால்பந்து மைதானத்தை விட பெரியதாக இருக்கிறது. விமான இறக்கைகள் 385 அடி நீளமும் 50 அடி உயரமும் கொண்டுள்ளன. 226 டன் எடை கொண்ட இந்த ஸ்ட்ரேடோலாஞ்ச், 113 டன் எரிபொருளை சேமிக்கும் வசதி கொண்டது.

28 சக்கரங்கள் மற்றும் ஆறு ஜெட் எஞ்சின்களுடன் மிகவும் பிரமாண்டமாகக் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த விமானம் தூரத்தில் இருந்து பார்க்கும்போது ஒரு மலை போல் காட்சி அளிப்பதாகத் தெரியவருகிறது. 

இவ்வளவு சிறப்பான ஸ்ட்ரேடோலாஞ்ச், பயணிகளுக்காக வடிவமைக்கப்படவில்லை. ராக்கெட்டுகளை சுமந்து செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறது. 1000 டன் வரை எடை கொண்ட சிறிய வகை ராக்கெட்டுகள் இந்த விமானத்தின் ஆர்பிட் பகுதியுடன் இணைக்கப்படும். 35,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும்போது ராக்கெட்டுகள் விடுவிக்கப்பட்டு விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.