இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முகநூல்
உலகம்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் | தொடங்கியது வாக்குப்பதிவு - மெஜாரிட்டி எதிர்பார்ப்பில் அதிபர் அனுரகுமார!

இலங்கையில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. 225 உறுப்பினர்களில் 196 உறுப்பினர்களை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பார்கள்.

PT WEB

இலங்கையில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. 225 உறுப்பினர்களில் 196 உறுப்பினர்களை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பார்கள்.

அதிபர் அனுரகுமாரவின் தேசிய மக்கள் சக்தி, எதிர்க்கட்சித்தலைவராக இருந்த சஜித் பிரேமதாச, மற்றும் முன்னாள் இடைக்கால அதிபர் ரணிலின் புதிய சனநாயக முன்னணி, ராஜபக்சேவின் பொதுஜன முன்னணி உள்ளிட்ட சிங்களக் கட்சிகளும் எஸ்.ஸ்ரீதரன் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளும் களத்தில் நிற்கின்றன.

29 உறுப்பினர்கள், தேசிய பட்டியல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற ஒரு கட்சியோ, கூட்டணியோ 113 இடங்களைப் பெற்றிருக்க வேண்டும். ஒரு வாக்காளர் 3 வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். ஒரு கட்சியையும் தேர்வு செய்ய வேண்டும். காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு முடிவடைகிறது.

8,352 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்குப் பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அநுர குமார திசநாயக தாம் விரும்பிய சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெறவேண்டும்.

2022 ஏப்ரல் மத்தியில் இலங்கை பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த பிறகு நடக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் என்பதாலும் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.