உலகம்

சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பாரீஸ்.. கொரோனா பரவல் உயரும் அபாயம்

webteam

உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்துவரும் அதே நேரத்தில், ஒருசில பகுதிகளில் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. நியூசிலாந்தில் தொற்று முழுமையாக குறைந்துள்ள நிலையில், பிரேசில் போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகள் நோயைத் தடுப்பதில் கடுமையாக போராடிவருகின்றன.

தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், அதை சிவப்பு மண்டலமாகவும் அதிக ஆபத்துள்ள கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாகவும் பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.

பொதுப்போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்கும் வகையில், பல்வேறு கட்டுப்பாடுகளை பாரீஸ் நகர நிர்வாகம் விதித்துள்ளது. நோய்த் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ள பொது இடங்களுக்கு மக்கள் வருவற்கும் தடைகள் நீடிக்கின்றன.

கடந்த இரண்டு வாரங்களாக பாரீஸ் நகரில் கொரோனா பரவல் உயர்ந்துவருவதால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.