உலகம்

பாக். டேங்கர் லாரி விபத்து - பலி எண்ணிக்கை உயர்வு

பாக். டேங்கர் லாரி விபத்து - பலி எண்ணிக்கை உயர்வு

webteam

பாகிஸ்தானில் எண்ணெய் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 175-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி பலியான நிலையில், பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  

கிழக்கு பாகிஸ்தானில் உள்ள பஹவல்பூர் நகரில் எண்ணெய் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி ஒன்று கடந்த 24ம் தேதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால்,
லாரியிலிருந்து சாலையில் சிந்திய எண்ணெய்யை பிடிக்க அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் முண்டியடித்தனர். அப்போது திடீரென தீப்பற்றியதால் எண்ணெய் பிடிக்க
லாரியை சூழ்ந்திருந்த 120க்கும் மேற்பட்டோரும் உடல் கருகி சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் ஏராளமானோர் உயிரிழந்த வருகின்றனர். இதுவரை 175 பேர் பலியாகியுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ள நிலைியல், பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இந்த விபத்தின்போது அங்கு சிலர் புகைப்பிடித்து கொண்டிருந்தததாகவும், இதனால்தான் டேங்கர் லாரி வெடித்து சிதறியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.